இந்த சூர்யா பட நாயகி சீரியஸான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

சித்திக் இயக்கத்தில் விஜய், சூர்யா, வடிவேலு, தேவயானி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் 'பிரண்ட்ஸ்'. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக விஜயலக்ஷ்மி நடித்திருந்தார்.

தொடர்ந்து அவர்  கன்னடம், தெலுங்கு என பிஸியாக நடித்துக்கொண்டிருந்தார். கடைசியாக ஹிப்ஹாப் ஆதியின் 'மீசைய முறுக்கு' படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் இவர் 4 நாட்களுக்கு முன்பு பெங்களூருவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் உயர் ரத்த அழுத்தம் காரணமாக  அனுமதிக்கப்பட்டுள்ளாராம்.

மேலும் அவரது சகோதரி தங்களுக்கு  நெருங்கிய வட்டாரத்திடம் விஜயலக்ஷ்மியின் சிகிச்சைக்கு பண உதவி  செய்யக் கோரி  கேட்டுள்ளாராம். விஜயலக்ஷ்மி கடந்த வருடம் கன்னடப் படமொன்றில் நடித்திருந்தார். அதன் பின்னர் அவர் வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Vijayalakshmi admitted in hospital For high blood pressure

People looking for online information on BP, Friends, Suriya, Vijayalakshmi will find this news story useful.