சந்திரா ஆர்ட்ஸ் சார்பாக இசக்கி துரை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கும் புதிய படத்தில் "மக்கள் செல்வன்" விஜய்சேதுபதி நடிக்க விருக்கிறார்.
இந்த படத்தை பேரான்மை, புறம் போக்கு படங்களில் இயக்குநர் ஜனநாதனிடம் பணியாற்றிய வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்குகிறார். இப்படத்துக்காக 150 வருடம் பழமைவாய்ந்த பிரம்மாண்டமான சர்ச் செட் உருவாக்கப்படவுள்ளது. நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகும் படங்களில் இந்த படம் அதிக பட்ஜெட் படமாக இருக்கும்.
கிறிஸ்துமஸ், காதல், இசை என கொண்டாட்டங்களை உள்ளடக்கிய இந்த கதையில் சர்வதேச அளவில் நடைபெறும் பிரச்னையை பற்றி பேசுகிறது இப்படம்
இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் விஜய்சேதுபதி இசைக்கலைஞராக நடிக்கவுள்ளார். இந்த நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்க, மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார்.
மார்ச் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது. மூனாறு, கொடைக்கானல், ஊட்டி, கேரளா ஆந்திரா உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.
இப்படத்தின் மற்ற நடிகர் நடிகையர் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.