ஷூட்டிங்கில் மூதாட்டிக்கு உதவிய மாமனிதன் விஜய் சேதுபதி - அடுத்து நிகழ்ந்த சோகம்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை படங்களுக்கு பிறகு விஜய் சேதுபதி - சீனு ராமசாமி இணைந்துள்ள படம் மாமனிதன். இந்த படத்தை யுவன் ஷங்கர் ராஜா தயாரிக்கிறார்.

இந்த படத்துக்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைக்கவுள்ளனர். ஜோக்கர் குரு சோம சுந்தரம் , காயத்ரி ஆகியோர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஆழப்புழாவில் நடைபெற்றுவருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பின் போது விஜய் சேதுபதியிடம் மூதாட்டி ஒருவர் பண உதவி கேட்டிருக்கிறார். அப்போது அவர் தனது மேனேஜரை அழைத்து பணம் வாங்கி அந்த மூதாட்டியிடம் கொடுத்துள்ளார்.

சில நிமிடங்கள் கழித்து அந்த மூதாட்டி அங்கிருந்து செல்கையில் மயக்கமாகியிருக்கிறார். அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Vijay sethupathi helps old lady in Mamanithan shooting spot

People looking for online information on Maamanithan, Seenu ramasamy, Vijay Sethupathi, Yuvan Shankar Raja will find this news story useful.