ஏய் கடவுளே.... மக்கள் செல்வனின் குரலில் வெளியான இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் பாடல்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

பியார் பிரேமா காதல் படத்தின் வெற்றிக்கு பிறகு ஹரிஸ் கல்யாண் நடித்திருக்கும் படம் இஸ்பேட் ராஜாவும் இதயராணியும். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ளார்.

சாம் சி.எஸ்.இசையமைத்துள்ள இந்த படத்தை விஜய் சேதுபதி நடித்த புரியாத புதிர் இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி தயாரித்து இயக்கியுள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே உருவாகி வரும் இந்த படத்திலிருந்து அனிருத் பாடிய கண்ணம்மா என்ற பாடல் ரசிகர்களை கவர்ந்தது.

இதனையடுத்து இந்த படத்திலிருந்து ஏய் கடவுளே என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாடலை ரஞ்சித் ஜெயக்கொடி எழுதியுள்ளார். ஹரிஸ் கல்யாண் இந்த பாடலை பாடியுள்ளார்.

மேலும் சர்ப்ரைஸாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த பாடலின் தொடக்கத்தில் இடம் பெற்ற பட்டினத்தார் வரிகளை உணர்ச்சி ததும்ப பேசுகிறார். அவரது குரல் பாடலுக்கு மிகுந்த பலம்  சேர்ப்பதாக அமைந்துள்ளது.

ஏய் கடவுளே.... மக்கள் செல்வனின் குரலில் வெளியான இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் பாடல் VIDEO

Vijay sethuapathi's Aei Kadavule song released from Harish kalyan's Ispade Rajavum Idhaya raniyum

People looking for online information on Harish Kalyan, Ispade Rajavum Idhaya Raniyum, Sam C.S, Vijay Sethupathi will find this news story useful.