அலப்பரை கூட்டும் அஜித்தின் வேட்டிக்கட்டு பாடல் வீடியோ இதோ

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

நடிகர் அஜித்குமார் - நயன்தாரா நடிப்பில் பொங்கலுக்கு வெளியான ‘விஸ்வாசம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘வேட்டிக்கட்டு’ பாடல் வீடியோ வெளியாகியுள்ளது.

‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விஸ்வாசம்’ வரிசையில் அஜித்-சிவா கூட்டணியில் வெளியான ‘விஸ்வாசம்’ திரைப்படம் வசூல் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் தம்பி ராமையா, யோகிபாபு, ரோபோ ஷங்கர், கோவை சரளா, ஜெகபதி பாபு, அனிகா உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்த இப்படத்தின் பாடல்கள் பட்டித்தொட்டி எங்கும் ஹிட்டடித்துள்ளது.

இந்நிலையில், ‘விஸ்வாசம்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘வேட்டுக்கட்டு’ பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது. அலப்பரை, அடாவடி, தடாலடி தூக்குத்துரையின் வேட்டிக்கட்டு ஸ்டைலில் அசந்த அவரது ரசிகர்கள் இந்த வீடியோ பாடலை கொண்டாடி வருகின்றனர்.

அலப்பரை கூட்டும் அஜித்தின் வேட்டிக்கட்டு பாடல் வீடியோ இதோ VIDEO

'Vetti Kattu' Video song from Viswasam released

People looking for online information on Ajith Kumar, D.Imman, Nayanthara, Vettikkattu song, Viswasam will find this news story useful.