சிம்புவுக்கு ஜோடியாக போடா போடி படத்தில் அறிமுகமானார் வரலக்ஷ்மி சரத்குமார். பின்னர் பாலாவின் தார தப்பட்டையில் மிரட்டலான நடிப்பால் திரையுலகினரை திரும்பி பார்க்கவைத்தார் அவர்.
தற்போது சர்கார் படத்தில் தனது அரசியல் நகர்வுக்காக இவர் செய்த வில்லத்தனத்தால் பார்வையாளர்களை கதிகலங்க வைத்தார்.
இந்நிலையில் Behindwoods Gold Medal நிகழ்ச்சியில் இவருக்கு எதிர்மறை கதாப்பாத்திரத்தில் சிறந்த நடிகைக்கான விருது சர்கார் மற்றும் சண்டக்கோழி 2 படங்களுக்காக இவருக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அவரது புகைப்படத்துடன் நடுவில் ஜெயலலிதா இருப்பது போல் ஜெ.ஜெயலலிதா எனும் நான் என்ற மீம் காட்டப்பட்டது. அதனை பார்த்து இது எப்போ என தொகுப்பாளர் ஆர்.ஜே.விக்னேஷ் கேட்டார். அதற்கு பதிலளித்த வரலக்ஷ்மி, இப்போது நடிச்சுட்டு இருக்கேன். அப்றோம் டைரக்ட் பண்ணுவேன். அப்புறம் கண்டிப்பா அரசியலுக்கு வருவேன் என்றார்.
பின்னர் அவரிடம் kill, Kiss, Marry என்ற மூன்று வாய்ப்புகளைக் கொடுத்தார். பின்னர் அவருக்கு விஷால், சிம்பு, Anyone என்ற மூன்று பதில்களைத் தேர்ந்தெடுக்குமாறு குறிப்பிட்டார்.
சற்று யோசித்த வரலக்ஷ்மி விஷாலுக்கு கில், எனவும் கிஸ் சிம்புவுக்கும், மேரி Anyone எனவும் குறிப்பிட்டார்.