இயக்குநர் பாலாஜி தரணிதரனின் 'ஒரு பக்க கதை' படத்தில் அறிமுகமானவர் மேகா ஆகாஷ். அதனைத் தொடர்ந்து அவர் கௌதம் மேனனின் 'எனை நோக்கி பாயும்' தோட்டா படத்தில் நடித்தார்.
சமீபத்தில் அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'பேட்ட' படத்தில் நடித்திருந்தார். தற்போது இந்த படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் சிம்புவுடன் இவர் நடித்திருக்கும் 'வந்தா ராஜாவாதான் வருவேன்' திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை (Feb 1 ) வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இவர் Behindwoods தளத்துக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அதில், எஸ்டிஆர் சிறந்த நடிகர். ரொம்ப ஜாலியான ஆளு. அவர் கூட நடிக்கிறது ஈஸியா இருந்தது. நடிப்பை பொறுத்தவரை அவர் நிறைய சொல்லிக்கொடுப்பாரு. அப்படி பண்ணாதிங்கனு இப்படி பண்ணுங்க சொல்லிக் கொடுப்பாரு.
'வந்தா ராஜாவாதான் வருவேன்' செட்ல மறக்க முடியாத விஷயம்னா நானும் ரோபோ ஷங்கரும் நிறைய சண்ட போடுவோம். அவர் தொடர்ந்து கிண்டல் பண்ணிட்டே இருப்பாரு.
விஜய் கூட ஒரு விளம்பரத்துல நடிச்சிருந்தேன். அவர் மிகவும் பொறுமைசாலி. மிகவும் திறமையானவர். அவர் கூட சீக்கிரமே ஒரு படம் நடிக்கனும் என்றார்.