நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினி மற்றும் கமல் குறித்து பதிவொன்றை எழுதியுள்ளார். அதில், ரஜினி சாரும், கமல் சாரும் ஒன்றாக செயல்படவேண்டும். அது நடிகர் சங்க விழாவுக்காகவோ அல்லது பன்முக நடிகர்கள் நடிக்கும் படத்துக்காகவோ அல்ல. 2019 ஆம் ஆண்டு நடக்கும் லோக்சபா தேர்தலுக்காக. அது தேர்தலின் தன்மையை மாற்றக் கூடிய ஒன்றாக இருக்கும். என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு உதயநிதி ஸ்டாலின் ரஜினி, கமல் மற்றும் சிவக்குமார் உள்ளிட்டோர் ஒன்றாக அமர்ந்திருக்கும் படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில், ஜெயலலிதாவின் கைதிற்கு எதிராக அவர்கள் போராட்டம் நடத்தியதாக கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் பின்னர் அந்த புகைப்படம் தவறு என தெரிந்ததும் அதனை உடனடியாக நீக்கி விட்டார். பின்னர் தனி பதிவு ஒன்றில், சரியாக ஆராயாமல் போட்டோஷாப் செய்யப்பட்ட புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தேன். அதனால் அதனை நீக்கி விட்டேன். அது என் தவறு. என்னுடைய அட்மினுடையது அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.
I wish Rajini sir and kamal sir come together. Not for Nadigar sangam show. Not for any star reception.Not for any multistarrer. Not for anythin but 2019 Loksabha. Yes. It will be a game changer.
— Vishal (@VishalKOfficial) February 26, 2019