துணை நடிகை யாஷிகா தூக்கிட்டு தற்கொலை

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

தமிழ் சினிமாவில் துணை நடிகர்கள் தங்களது சொந்த பிரச்னைகள் காரணமாக தற்கொலை செய்துக் கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

நடிகர் விமல் நடித்த ‘மன்னர் வகையறா’ திரைப்படத்தில் நடித்த யாஷிகா என்பவர் சில தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார். திருப்பூரைச் சேர்ந்த மேரி ஷீலா ஜெபராணி என்கிற யாஷிகா காதலருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

சென்னை வடபழனியில் மகளிர் விடுதியில் வசித்து வந்த யாஷிகாவும், பெரம்பூரைச் சேர்ந்த அரவிந்த் என்கிற மோகன்பாபுவும் காதலித்து வந்துள்ளனர். கடந்த சில மாதங்களாகவே திருமணம் செய்துக் கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து வந்த யாஷிகா-அரவிந்த் இடையே சில நாட்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், யாஷிகாவிடம் கோபித்துக் கொண்டு அரவிந்த் அவரது வீட்டிற்குச் சென்றுவிட்டதாகவும், காதலன் ஏமாற்றிய விரக்தியில் யாஷிகா தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், தற்கொலை செய்வதற்கு முன், தன்னை திருமணம் செய்துக் கொள்ளாமல் ஏமாற்றிய காதலனுக்கு தக்க தண்டனை பெற்றுத் தரும்படி யாஷிகா தனது தாய்க்கு வாட்ஸ்-அப்பில் தகவல் அனுப்பியுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

TV actress Yashika commits Suicide

People looking for online information on Mannar Vagaiyara, Mary Sheela Jebarani, TV Actress, Yashika, Yashika Suicide will find this news story useful.