‘ரோஜா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்த நடிகை மதுபாலா, நடிகர் விஜய்யுடன் இணைந்து நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
கே.பாலச்சந்தரின் ‘அழகன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை மதுபாலா, மணிரத்னம், ஷங்கர் உள்ளிட்ட இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். ‘ரோஜா’, ‘ஜெண்டில்மேன்’ போன்ற திரைப்படங்களில் தனது நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு துல்கர் சல்மான் தமிழில் அறிமுகமான ‘வாயை மூடி பேசவும்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ரீ-எண்ட்ரி கொடுத்தார். அதைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்த நிலையில், கன்னடா, தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்தார்.
தற்போது மீண்டும் தமிழில் நடிகர் பாபி சிம்ஹா, ரம்யா நம்பீசன் நடிக்கும் ‘அக்னி Vs தேவ்’ திரைப்படத்தில் மிரட்டலான அரசியல்வாதி கதாபாத்திரத்தில் மதுபாலா நடித்துள்ளார். இந்நிலையில், Behindwoods தளத்திற்கு சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் பல சுவாரஸ்யமாக தகவல்களை பகிர்ந்துக் கொண்டார்.
அப்போது பேசிய அவர், தற்போதைய நடிகர்களான சிவகார்த்திகேயன், தனுஷ், சிம்பு ஆகியோரின் படங்களை பார்ப்பேன். அவர்களது நடிப்பில் ரொம்ப பிடிக்கும். ஆனால் யாருடன் இணைந்து நடிக்க விரும்புவீர்கள் என்று கேட்டால், தளபதி விஜய் தான். கடந்த 20 ஆண்டுகளாக அவரை பார்க்கிறேன்.
அவரது ஸ்டைல் ரொம்ப பிடிக்கும், படத்திற்கு படம் ஸ்மார்ட்டாக இருக்கிறார். அவருடன் நடிக்க ஆசை என்று தெரிவித்துள்ளார். அத்துடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்படத்திலும் நடிக்க விருப்பம் எனனடிகை மதுபாலா தெரிவித்துள்ளார்.