SK13 இசை உரிமத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘எஸ்.கே 13’ திரைப்படத்தின் இசை உரிமத்தை திங்க் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

‘சீமராஜா’ திரைப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘எஸ்.கே 13’ திரைப்படத்தை இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கி வருகிறார். சிவகார்த்திகேயன் - நயன்தாரா ஜோடி சேர்ந்து நடித்து வரும் இப்படத்திற்கு ஹிப்-ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார்.

ஸ்டூடியோ க்ரீன் தயாரித்து வரும் இப்படத்தின் இசை உரிமத்தை திங்க் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாகவுள்ளது. ராதிகா சரத்குமார், விவேக் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் மீது கூடுதல் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.

Think Music bagged Musical rights for SK13

People looking for online information on Hiphop Tamizha, M Rajesh, Nayanthara, Sivakarthikeyan, SK 13, SK 13 First Look Poster, Think Music will find this news story useful.