'திமிறு காட்டாதடி' - ஆர்.ஜே. பாலாஜியின் 'எல்கேஜி' படத்திலிருந்து வெளியான பாடல் வீடியோ இதோ

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

ஆர்.ஜே. பாலாஜி, ஜே.கே.ரித்தீஷ், பிரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் எல்கேஜி. இந்த படத்துக்கு ஆர்.ஜே. பாலாஜி கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருந்தார்.  கே.ஆர். பிரபு இந்த படத்தை இயக்கியிருந்தார்.

அரசியலை மையமாகக் கொண்டு உருவான இந்த படம் ரசிகர்களை கவர்ந்தது. லியோன் ஜேம்ஸ் இசையில் இந்த படத்தின் பின்னணி இசையும் பாடல்களும்  நல்ல வரவேற்பை பெற்றன. குறிப்பாக எத்தனை காலம் தான் ஏமாற்றுவார், திமிறு காட்டாதடி பாடல்கள் ஹிட்டடித்தன.

இந்நிலையில் இந்த படத்திலிருந்து தற்போது திமிறு காட்டாதடி என்ற பாடல் வீடியோ வெளியாகியுள்ளது . இந்த பாடலை இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுத சத்யபிரகாஷ் , லியோன் ஜேம்ஸ் இருவரும் இணைந்து பாடியுள்ளனர்.

'திமிறு காட்டாதடி' - ஆர்.ஜே. பாலாஜியின் 'எல்கேஜி' படத்திலிருந்து வெளியான பாடல் வீடியோ இதோ VIDEO

Thimiru kaatathadi Video song released from RJ Balaji's LKG

People looking for online information on Leon James, LKG Tamil, Priya Anand, RJ Balaji will find this news story useful.