உனக்கு இது கரெக்ட்டா இருக்கும்- ஓவியாவின் ‘பழம்’ ஸ்னீக் பீக் வீடியோ இதோ

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா நடித்துள்ள 90ML திரைப்படத்தின் ‘பழம்’ ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது.

பெண் இயக்குநர் அனிதா உதீப் இயக்கத்தில் ஓவியா நடித்துள்ள 90ML திரைப்படம் அடல்ட் காமெடி ஜானரில் உருவாகியுள்ளது. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. நடிகர் சிம்பு இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் ‘பழம்’ என்ற ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது. தட்டு நிறைய பழங்களை வைத்து, தனது தோழிகளுக்கு ஏற்ற பழங்களை ஓவியா தேர்ந்தெடுத்து கொடுக்கும்படியான காட்சிகள் இந்த ஸ்னீக் பீக் வீடியோவில் இடம்பெற்றுள்ளன. 

இப்படம் வரும் மார்ச்.1ம் தேதி ரிலீசாகவுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி பிறகு ஓவியா நடிப்பில் வெளியாகவிருக்கும் இப்படத்தின் மீது கூடுதல் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.

உனக்கு இது கரெக்ட்டா இருக்கும்- ஓவியாவின் ‘பழம்’ ஸ்னீக் பீக் வீடியோ இதோ VIDEO

The most awaited 90ML sneak peek video is out

People looking for online information on 90 ML, Anita Udeep, Oviya, Simbu, Str will find this news story useful.