ரொம்ப ஜாலியா இருக்கு.. ‘பத்ம ஸ்ரீ’ பிரபுதேவா மகன் ஒரே குஷி

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

நடன இயக்குநர், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்டவர் பிரபுதேவா. குரூப் டான்ஸராக தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமான பிரபுதேவா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என சுமார் 100-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

ரசிகர்களால் இந்திய மைக்கேல் ஜாக்சன் என்றும், நடனப்புயல் என்றும் அழைக்கப்படும் பிரபுதேவாவிற்கு 70வது குடியரசு தினத்தையொட்டி மத்திய அரசு ‘பத்ம ஸ்ரீ’ விருது அறிவித்தது. ‘பத்ம ஸ்ரீ’ விருது அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பிரபுதேவாவிற்கு பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரபுதேவாவின் மகன் தனது அப்பாவிற்கு ‘பதம் ஸ்ரீ’ விருது கிடைத்ததற்காக பாராட்டுத் தெரிவித்த நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி என மகிழ்ச்சியுடன் வீடியோ ஒன்றை பிரபுதேவாவின் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Thanks for all the Love- Prabhudeva son feels proud of his Padma Shri Father

People looking for online information on Padma Awards, Padma shri, Prabhudeva, Prabhudeva Son will find this news story useful.