தளபதி விஜய் சர்கார் படத்துக்கு பிறகு அட்லி இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.

ஏஜிஎஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.
இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. பூஜையின் போது படக்குழு எடுத்துக்கொண்ட வெளியிடப்பட்டது. அந்த புகைப்படத்தில் டேனியல் பாலாஜி, ஆனந்த ராஜ், தீனா உள்லிட்டோர் இடம்பெற்றிருந்தனர். வேட்டையாடு விளையாடு, பொல்லதாவன் போன்ற படங்களில் தனது மிரட்டலான வில்லத்தனத்தால் கலங்கடித்தவர் டேனியல் பாலாஜி.
ஏற்கனவே விஜய்யுடன் பைரவா படத்தில் வில்லன் வேடத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இது குறித்த தகவல் விரைவில் வெளியாகலாம்.