தமிழ், தெலுங்கு, கன்னட, ஹிந்தி மொழிகளில் திரைப்படமாக உருவாகவிருக்கும் ‘தி ஹைவே மாஃபியா’ நாவல் குறித்து எழுத்தாளர் சுசித்ரா ராவ் பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
‘தி ஹைவே மாஃபியா’ நாவல் கால்நடைகளை கடத்துவது தொடர்பான கதை. அரசியல் மற்றும் த்ரில்லர் பின்னணியைக் கொண்ட இந்த நாவலுக்கு வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில், இந்த நாவலை திரைப்படமாக எடுக்கும் முயற்சியில் எழுத்தாளர் சுசித்ரா ராவ் களமிறங்கியுள்ளார். தமிழில் இந்த கதையை திரைப்படமாக்கினால் தனது அர்ஜுன் கிருஷ்ணன் கதாபாத்திரத்தில் தளபதி விஜய் தான் நடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Behindwoods -க்கு சுசித்ரா ராவ் அளித்த பேட்டியில் இத்திரைப்படம் குறித்த பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துக் கொண்டார். இந்த கதையை தமிழில் படமாக்கினால் தனது ஸ்டைலிஷான கதாபாத்திரத்திற்கு விஜய் சார் தான் பொருத்தமாக இருப்பார்.
மேலும், இந்த படத்தில் விஜய்யின் மாஸ் இண்ட்ரோ சீன் குறித்து கேட்டபோது, விஜய்யின் டிரேட் மார்க் டயலாக்கான ‘ஐயம் வெயிட்டிங்..’ போன்று ‘தி ஹண்ட் பிகின்ஸ்’ என்ற மாஸ் டயலாக்குடன் விஜய்யின் இண்ட்ரோ சீன் இருக்கும் என கூறினார்.
ட்விட்டரில் பலரும் இயக்குநர் வெற்றிமாறனை அணுகுமாறு ஆலோசனை கூறியதாகவும், தனது தரப்பில் இருந்து இதுவரை எந்த நடிகரிடமும், இயக்குநரிடமும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை எனவும் சுசித்ரா ராவ் தெரிவித்துள்ளார்.