தல-க்கு அடுத்து தளபதி தான்- ‘தளபதி 63’-யை டார்கெட் செய்யும் பிரபல காமெடி நடிகர்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ திரைப்படத்தில் நடித்த காமெடி நடிகர் ரோபோ ஷங்கர், அடுத்ததாக விஜய்யுடன் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

காமெடி நடிகரும், மிமிக்ரி ஆர்ட்டிஸ்டுமான ரோபோ ஷங்கர் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடி நடிகர்கள் பட்டியலில் இருக்கிறார். சமீபத்தில் வெளியான ‘விஸ்வாசம்’ திரைப்படத்தில் தம்பி ராமையா, விவேக், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருந்த நிலையிலும், தனக்கான கதாபாத்திரத்தை கனக்கச்சிதமாக நடித்து மக்களின் பாராட்டை பெற்றார்.

இந்நிலையில், தற்போது விஜய் நடித்து வரும் ‘தளபதி 63’ திரைப்படத்தில் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனிடையே Behindwoods தளத்திற்கு பிரத்யேகமாக பேட்டியளித்த ரோபோ, நீண்ட நாட்களாகவே தளபதி சாருடன் படம் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. சமீபத்தில் தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் சார்பில் நடந்த பொங்கல் விழாவில் அட்லியை சந்தித்தபோது கூட அவர் விரைவில் இணைந்து படம் பண்ணலாம் ரோபோ என்றார்.

என் மகளின் டிக் டாக் வீடியோவில் அவளது நடிப்பை பார்த்துவிட்டு, ‘தளபதி 63’ படத்தில் நடிக்க அட்லியின் டீம் அவளை தேர்வு செய்தனர். என் பொண்ணுக்கு மட்டும் தான் சான்ஸா எனக்கில்லையா என கேட்டேன். அதையாவது ரகசியமாக வைய்யுங்கன்னு அட்லி சொல்லிட்டார் என ரோபோ ஷங்கர் கூறியுள்ளார்.

ஏற்கனவே தளபதி 63 திரைப்படத்தில் விவேக், யோகிபாபு ஆகியோர் நடிக்கவுள்ளனர். சமீப காலமாக விஜய் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் காமெடி டிராக் குறைவாக இருந்த நிலையில், தளபதி 63 படத்தில் காமெடி நடிகர்கள் இணைவதால் விஜய்யின் நக்கல் நையாண்டியை காண அவரது ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

தல-க்கு அடுத்து தளபதி தான்- ‘தளபதி 63’-யை டார்கெட் செய்யும் பிரபல காமெடி நடிகர் VIDEO

Thalapathy 63 update: Comedian Robo Shankar hints about Thalapathy 63 cast

People looking for online information on Atlee, Comedy, Robo shankar, Thalapathy 63, Vijay will find this news story useful.