இளையராஜா விழாவுக்காக ரஜினிக்கு நேரில் அழைப்பு

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

இளையராஜாவின் 75 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மிகப் பெரிய அளவில் விழா எடுக்க இருக்கிறது. இரண்டு நாள் நிகழ்வாக நடைபெறும் இந்த விழா சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் பிப்ரவரி 2, 3 ஆகிய தேதிகளில் நடைபெறவிருக்கிறது.

இதில் 2 ஆம் தேதி தென்னிந்திய திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.  பிப்ரவரி இளையராஜா இசை நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது.

இதனை முன்னிட்டு தமிழ்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் நடிகர் ரஜினிகாந்தை அவரது வீட்டில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.

இந்த நிகழ்வில் ரஜினிகாந்துடன் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், செயலாளர்கள் கதிரேசன், எஸ்.எஸ்.துரைராஜ் மற்றும் உறுப்பினர்கள் எஸ்.ஆர்.பிரபு, மனோபாலா  ஆகியோர் உடனிருந்தனர்.

TFPC President Vishal meets Rajinikanth for Ilaiyaraja Concert

People looking for online information on Ilaiyaraaja, Rajinikanth, Vishal will find this news story useful.