காஷ்மீரின் புல்வாமா பகுதியில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலுக்கு நடிகர் ரஜினிகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையினர் மீது, தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 44 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த கொடூர தாக்குதலுக்கு நாடும் முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது.
இந்நிலையில், புல்வாமா தாக்குதல் சம்பவத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், காஷ்மீர் புல்வாமாவில் நேற்று தீவிரவாதிகள் நடத்திய வன்முறை தாக்குதல்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன். பொறுத்தது போதும்... இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.
உயிரிழந்த அனைத்து ஜவான்களின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். வீரமரணமடைந்த இவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.