தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் பிரபலமாக விளங்கியவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் பாலிவுட் திரையுலகில் முதல் லேடி சூப்பர் ஸ்டாராகவும் அறியப்படுகிறார்.
இவர் கடந்த வருடம் உறவினர் திருமணவிழாவிற்கு சென்ற அவர் அங்கேயே மரணமடைந்தார். அவர் மரணித்து ஒரு வருடம் ஆன நிலையில் அதனை நினைவு கூறும் விதமாக அவரது நினைவு நாள் பிப்ரவரி 24 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது.
சென்னையை சேர்ந்த பரிசேரா என்ற நிறுவனம் ஸ்ரீதேவியின் குடும்பத்தினரின் அனுமதியுடன் அவருக்கு மிகவும் பிடித்தமான புடவையை ஏலம் விட்டது.
இந்த ஏலத்தின் மூலம் கிடைக்கும் இந்த தொகை, கன்சர்ன் இந்தியா பவுண்டேசன் என்ற தொண்டு நிறுவனத்துக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது ரூ. 40,000க்கு கேட்கப்பட்ட ஏலத் தொகை இறுதியாக ரூ. 1,30,000 வரை சென்றதாக கூறப்படுகிறது.
Parisera invites you to participate in the auction of Actress Sridevi's handwoven Kota sari. Mr Boney Kapoor has chosen the 27-Year old Non-Profit organization Concern India Foundation to receive the proceeds from the auction. https://t.co/WMI13FGsQy pic.twitter.com/WbLrOHEeT8
— Parisera.com (@parisera) February 20, 2019