சிவகார்த்திகேயனின் படம் இந்திய அளவில் நம்பர் 1

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

 

நடிகர் சிவகார்த்திகேயன் காமெடி, ஆக்சன், சென்டிமென்ட் என குடும்ப ரசிகர்களை அதிகம் கவரக் கூடிய படங்களாக செய்யக் கூடியவர்,  அதனால் இவரது படங்கள் வெளியாகும் போதெல்லாம் குடும்பம் சகிதம் தியேட்டர் நோக்கி படையெடுப்பார்கள்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் - பொன்ராம் கூட்டணியில் உருவான படம் சீமராஜா. வழக்கமான காமெடி, காதலுடன் இந்த படத்தில் கூடுதலாக ஆக்ஷன் காட்சிகளும் அனல் பறக்கும் வகையில் எடுக்கப்பட்டிருந்தது. சமந்தா, சிம்ரன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்த இந்த படம் கடந்த வருடம் செப்டம்பர் 13 ஆம் தேதி வெளியாகியிருந்தது.

இந்த படம் கடந்த நியூ இயரை முன்னிட்டு ஜனவரி 1 ஆம் தேதி சன் டி.வியில் ஒளிபரப்பானது.  இந்த படத்தின் டிஆர்பி வழக்கத்தை விட பன்மடங்கு எகிரியது.

மேலும் Television Viewership Rating எனப்படும் TVR சீமராஜாவுக்கு 22.32 பதிவாகியுள்ளது. சென்னையில் மட்டும் 22.2 டிவிஆர் பதிவாகியுள்ளது. இதன் மூலம் இந்தியாவிலேயே நம்பர் 1 என்ற உயரத்தை சீமராஜா பெற்றுள்ளது.

பொதுவாக சிவகார்த்திகேயனுக்கு குழந்தைகள் பெரியவர்கள் என குடும்ப ரசிகர்கள் அதிகம் என சொல்லப்படுவதுண்டு. அது இந்த படத்தின் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது.

Sivakarthikeyan's film Seemaraja Makes a record

People looking for online information on Ponram, Samantha ruth prabhu, SeemaRaja, Sivakarthikeyan will find this news story useful.