தலைவர் மாஸ், தல ரவுண்டு கட்டி அடிச்சுருக்கார்... சிவகார்த்திகேயன் கமெண்ட்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

தமிழில் இந்த வருடம் பொங்கலை முன்னிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பேட்ட படமும், தல அஜித் நடிப்பில் விஸ்வாசம் படமும் வெளியாகியிருக்கின்றன.

இரண்டு நடிகர்களுமே தமிழ்நாட்டின் வெறித்தனமான ரசிகர்களை கொண்ட நடிகர்கள். அதனால் இன்று காலை முதலே தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகள் திருவிழாக் கோலம் பூண்டன.

இரண்டு படங்களும் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர். மேலும் திரையுலகில் உள்ள பிரபலங்கள் சிலரும் பேட்ட, விஸ்வாசம் பார்த்துவிட்டு நேர்மறையான கருத்துக்களை தெரிவித்துவருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து இரண்டு ட்விட் செய்துள்ளார். முதல் ட்விட்டில், தலைவர் மாஸாக இருக்கிறார்.  ஸ்டைல் மற்றும் எனர்ஜியான ரஜினிகாந்தை திரையில் காணலாம். அனிருத்தின் பின்னணி இசை வேற லெவல். கார்த்திக் சுப்புராஜ் மற்றும் அவரது குழுவுக்கு எனது வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.

பின்னர் மற்றொரு ட்விட்டில், தல ரவுண்டு கட்டி அடிச்சுருக்கார். காமெடி சென்டிமென்ட், மாஸ் என கலந்த கம்ப்ளீட் பேக்கேஜ். குடும்பத்துடன் காணக்கூடிய இந்த படத்தை கொடுத்ததற்காக சிவா சார், நயன்தாரா, இமான் அண்ணா ஆகியோருக்கு என் நன்றி. என்று குறிப்பிட்டுள்ளார்.

 

 

Sivakarthikeyan tweet about Ajith's Viswasam and Rajinikanth's Petta

People looking for online information on Ajith Kumar, Rajinikanth, Sivakarthikeyan will find this news story useful.