‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ திரைப்படத்தின் ரிலீஸின் போது தனது கட்-அவுட்டிற்கு அண்டாவில் பால் கொண்டு வந்து ஊற்ற வேண்டும் என நடிகர் சிம்பு தனது ரசிகர்களுக்கு அன்பு கட்டளை விதித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன், தனது திரைப்படத்தை அதிக கட்டணம் செலுத்தி பார்க்க வேண்டாம், கட்-அவுட், பேனர்கள் வைத்து பாலாபிஷேகம் எல்லாம் செய்ய வேண்டாம். அதற்கு பதில் உங்கள் அம்மாவிற்கு புடவை, அப்பாவிற்கு ஒரு சட்டை வாங்கிக் கொடுத்தீர்கள் என்றால் நான் சந்தோஷப்படுவேன் என தனது ரசிகர்களுக்கு நடிகர் சிம்பு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அந்த வீடியோவை பார்த்த சிலர், இவரெல்லாம் எதற்கு இதை சொல்றாரு, வெறும் பப்ளிசிட்டிக்காக பேசுறாரு, இவருக்கு இருப்பதோ 2 அல்லது 3 ரசிகர்கள் தான் என கூறியதையடுத்து சிம்பு தனது முடிவை மாற்றிக் கொண்டுள்ளார்.
தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், எனக்கு இருக்கும் 2 அல்லது 3 ரசிகர்களுக்கு அன்பு கட்டளையாக இதை சொல்றேன், இதுவரை இல்லாத அளவிற்கு எனக்கு பெரிய பெரிய கட்-அவுட், பேனர்கள் வைத்து, பால் பாக்கெட்டில் அல்லாமல் அண்டாவில் கொண்டு வந்து ஊற்றுங்கள்.. இதுல எந்த தப்பும் இல்ல, நான் ஒன்னும் அவளோ பெரிய ஆள் இல்லல, யாரும் கேள்வி கேட்க மாட்டாங்க.. ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’படத்திற்கு வேற லெவல செய்யுறீங்க, இது தான் நான் உங்கக்கிட்ட இருந்து எதிர்ப்பார்க்குறேன் என தெரிவித்துள்ளார்.