விஸ்வாசம் ஷூட்டிங்கில் ஜாலி கேலி அஜித்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

அஜித் நடிப்பில் பொங்கலை முன்னிட்டு கடந்த 10 ஆம் தேதி வெளியான படம் விஸ்வாசம். தந்தை, மகள் உறவை உணர்வுப் பூர்வமாக பேசிய இந்த படம் குடும்ப ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

இந்த படத்தில் நடிகர் ரோபோ சங்கர் மெரிட்டு என்ற கேரக்டரில் படம் முழுவதும் அஜித்துடன் படம் முழுக்க வரும் வேடங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் Behindwoods தளத்துக்கு அவர் அளித்த பேட்டியில்,

அவர் எந்த விழாக்களிலும் பெரிதாக கலந்து கொள்ளமாட்டார் என்பதால் அஜித்தை நேரில் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை.

அதனால் இந்த படத்தின் கதையை சிவா என்னிடம் கூறும் போது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. மேலும், இந்த படத்தில் சிவா மதுரைப் பக்கம் உள்ள பெயராக எனக்கு யோசிக்கும் போது எனது கதாப்பாத்திரத்தின் தன்மையை உணர்ந்து மெரிட்டு என்று சொன்னேன்.

படத்திலும் அஜித் என்னை மெரிட்டு என்பார். நான் கரெக்டு என்பேன். இந்த ரைமிங் நன்றாக இருந்தது. படத்தின் ஷூட்டிங்கின் போது ரசிகர்கள் 3 பேர் ஹைதராபாத் வந்திருந்து ஷூட்டிங் வேடிக்கை பார்த்தபடி இருந்தனர். இதனை கவனித்த அஜித் அவர்களை அழைத்து அறிவுரை கூறி அனுப்பினார். 

படத்தில் அஜித் மிகுந்த ஜாலியாக இருந்தார். இதுகுறித்து என்னிடம் பேசிய சிவா, இதுவரை அஜித்துடன் மூன்று படங்களை பணிபுரிந்துள்ளேன். அவரை இவ்வளவு மகிழ்ச்சியாக பார்த்ததில்லை என்றார்.

ஷுட்டிங் இடைவேளையின் போது நான், அஜித் , நயன்தாரா இணைந்து விளையாடுவோம். என்றார்.

விஸ்வாசம் ஷூட்டிங்கில் ஜாலி கேலி அஜித் VIDEO

Robo Shankar shares his experience with Thala Ajith in Viswasam

People looking for online information on Ajith Kumar, Nayanthara, Robo shankar, Viswasam will find this news story useful.