தென்னிந்திய திரைப்ட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகிய மூன்று பதவிகளுக்கு மட்டும் இன்று காலை ( பிப்ரவரி 17 ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் நடந்தது.
இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்கே செல்வமணி மீண்டும் வெற்றி பெற்றார் . மேலும் செயலாளர்களாக சண்முகம், பொருளாளராக சுவாமிநாதன் ஆகியோரும் வெற்றி பெற்றுள்ளார்கள்.
இந்த தேர்தலில் வெற்றி பெற்ற பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி மற்றும் நிர்வாகிகள் அனைவருக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. கடந்த முறையும் ஆர்கே. செல்வமணி தான் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.