எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் - ஆர்ஜே பாலாஜியின் எல்கேஜி சிங்கிள்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

ஆர்ஜே பாலாஜி, பிரியா ஆனந்த் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் எல்கேஜி. இந்த படத்தின் போஸ்டர்ஸ் உள்ளிட்டவற்றை வைத்து பார்க்கும்போது இந்த படம் நடப்பு அரசியலை கிண்டல் செய்திருக்கலாம் என்ற எண்ணம் உருவாகிறது.

இந்த படத்திலிருந்து அண்மையில் வெளியான போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த படத்தில் பிரபல அரசியல்வாதி நாஞ்சில் சம்பத்தும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வேல்ஸ் இண்டர்நேஷனல் தயாரித்துள்ள இந்த படத்தை பிரபு இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்துக்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் ஆர்.ஜே. பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் என்ற பாடல் குடியரசுத் தினத்தை முன்னிட்டு இன்று வெளியாகவுள்ளதாக அறிவித்துள்ளார்.

RJBalaji and Priya Anand lKG Single track will release today

People looking for online information on Leon James, LKG, Priya Anand, RJ Balaji will find this news story useful.