'எல்கேஜி'க்காக அரசியல்வாதிகளிடம் இருந்து மிரட்டல் வந்ததா? - ஆர்ஜே பாலாஜி பதில்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே. கணேஷ் தயாரித்து ஆர்.ஜே.பாலாஜி கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடித்திருக்கும் படம் எல்கேஜி.

RJ Balaji opens up LKG Movie and his Political thoughts

அரசியல் படமாக உருவாகியிருக்கும் இந்த படத்தில் ஜே.கே.ரித்தீஸ், பிரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். லியோன் ஜேம்ஸ் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இந்த படம் வருகிற 22 ஆம் தேதி வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திலிருந்து ஷான் ரோல்டன் பாடிய இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் என்ற பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இந்த படம் குறித்து நடிகர் ஆர்.ஜே.பாலாஜி Behindwoods தளத்துக்கு பேட்டியளித்திருந்தார். அதில், படத்துல அரசியல் பத்தி பேசியிருக்கிருக்கீங்க... அரசியல்வாதிகளிடம் இருந்து மிரட்டல் வந்ததா  என தொகுப்பாளர் கேட்டார். அதற்கு ஆர்ஜே. பாலாஜி,  பெரிய தலைவர்களுக்கும் பெரிய மனிதர்களுக்கும் என்ன தெரியுமானே தெரியல. 

குறிப்பிட்ட கட்சியிலிருந்து இரண்டாம் கட்ட தொண்டர்களிடம் இருந்து என்ன அசிங்கமா திட்டறது ரொம்ப வருஷமாகவே நடந்துட்டு இருக்கு. குறிப்பாக சென்னை வெள்ளத்தின் போது,  ஒரு கட்சியிலிருந்து ஐடி பிரிவிலிருந்து என்னை திட்டினார்கள். நான் குறிப்பிட்ட கட்சியை சேர்ந்தவன். அல்லது குறிப்பிட்ட ஜாதி, மதத்தை சேர்ந்தவன் என திட்டினார்கள், தற்போது இந்த கட்சியின் ஆதரவுக்காக இப்படி நடந்து கொள்கிறேன் என்று திட்டினார்கள். 

இப்போ எல்கேஜி படத்துக்கு பிறகு ஆமா இவன் பெரிய காவியத்தை எடுத்து கிழிச்சுட்டான் என திட்டுகிறார்கள்.  நான் எல்லாவற்றையும் தவிர்க்கத் தொடங்கிவிட்டேன். என்றார்.

OTHER NEWS STORIES

RJ Balaji opens up LKG Movie and his Political thoughts

People looking for online information on Leon James, LKG, Priya Anand, RJ Balaji will find this news story useful.