ஆர்.ஜே.பாலாஜி அரசியல்வாதி ஆகலாம் - ஐடியா கொடுக்கும் பிரபல நடிகர்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

‘இமைக்கா நொடிகள்’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் அதர்வா ‘பூமராங்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் மார்ச் 1ம் தேதி ரிலீசாகவுள்ளது.

‘ஜெயம் கொண்டான்’, ‘கண்டேன் காதலை’, ‘இவன் தந்திரன்’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் அதர்வா, மேகா ஆகாஷ், இந்துஜா, சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இப்படம் குறித்து பல சுவாரஸ்ய தகவல்களை நடிகர் அதர்வா பிரத்யேகமாக Behindwoods தளத்திடம் பகிர்ந்துக் கொண்டார். அப்போது பூமராங் திரைப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசினார். தன்னுடன் நடித்த நடிகைகள் மேகா ஆகாஷ், இந்துஜா, சதீஷ் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி குறித்தும் பேசினார்.

அப்போது அதர்வாவிடம் சதீஷ் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி ஆகியோருக்கு பொறுத்தமான வேறு துறைகள் என்னவாக இருக்கும் என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அதர்வா, சதீஷ் ஒரு ஹோஸ்டாக இருக்கலாம். ஆர்.ஜே.பாலாஜி ஒரு அரசியல்வாதியாக இருக்கலாம் என்றார்.

ஆர்.ஜே.பாலாஜியின் அரசியல் படம் குறித்து பேசிய அதர்வா, கன்னடாவில் வெளியான ‘நோகராஜ்’ என்ற அரசியல் காமெடி திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த படத்தை தமிழில் யார் பண்ணினா நல்லா இருக்கும் என்று நினைத்தபோது ஆர்.ஜே.பாலாஜி நினைவுக்கு வந்தார். அப்போது அவருடன் ஷூட்டிங்கில் இருந்தேன்.

இது பற்றி அவரிடம் பேசினேன். ‘நோகராஜ்’ படத்தில் நடித்த தனீஷ் செய்த் என்பவர் ஆர்.ஜே.பாலாஜியின் ரசிகர். அப்படி தான் இந்த எல்.கே.ஜி திரைப்படம் அமைந்தது என அதர்வா தெரிவித்துள்ளார்.

ஆர்.ஜே.பாலாஜி அரசியல்வாதி ஆகலாம் - ஐடியா கொடுக்கும் பிரபல நடிகர் VIDEO

RJ Balaji can becomes a Politician, says Actor Atharvaa

People looking for online information on Atharvaa, Boomerang, LKG, Megha Akash, RJ Balaji, Sathish will find this news story useful.