ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஜி.வி.பிரகாஷின் சர்வம் தாளமயம் சில நிமிட காட்சி

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் மின்சாரக் கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படங்களுக்கு பிறகு இயக்கியிருக்கும் படம் சர்வம் தாளமயம். ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

ராஜீவ் மேனன் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் வெளியான முந்தைய படங்களின் பாடல்களை போலவே இந்த படத்தின் பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இந்த படத்திலிருந்து பீட்டர் பீட்ட ஏத்து என்ற வீடியோ சாங் வெளியாகி வரவேற்பை பெற்றுவருகிறது.

இசையை அடிப்படையாகக் கொண்ட படத்தில் பிரபல மலையாள நடிகர் நெடுமுடி வேணு முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்திலிருந்து சில நிமிட காட்சிகள் வெளியாகியுள்ளது.

மால் ஒன்றில் ஜி.வி பிரகாஷ் இசைக்கருவியை வாசிக்க, கூட்டத்தில்  டிடி, அபர்னா ரவி ஆகியோர் ரசித்து கேட்டபடி இருக்கின்றனர். இந்த படம் பிப்ரவரி 1 ஆம் தேதி வெளியாகும் என  தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஜி.வி.பிரகாஷின் சர்வம் தாளமயம் சில நிமிட காட்சி VIDEO

Rajiv Menon's Sarvam Thala mayam starring GV Prakash sneak peek

People looking for online information on DD, GV Prakash Kumar, Rajiv Menon, Sarvam Thaala Mayam will find this news story useful.