ரஜினி கமல் பங்கேற்கும் தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட நிகழ்ச்சி

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

இசைஞானி இளையராஜாவின் 75 பிறந்தநாளை முன்னிட்டு அவரை கௌரவிக்கும் விதமாக தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்  சங்கம் இரண்டு நாள் விழா எடுக்க திட்டமிட்டுள்ளது.

இரண்டு நாள் நிகழ்வாக நடைபெறும் இந்த விழா பிப்ரவரி 2 மற்றும்  3 ஆகிய தேதிகளில் நடைபெறவிருக்கிறது. இந்த விழாவில் முதல் நாள் தென்னிந்திய திரையுலகைச் சேர்ந்த பிரபல நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோர் கலந்து  கொண்டு இசைஞானி இளையராஜாவுக்கு வாழ்த்துகள் தெரிவிக்க இருக்கின்றனர்.

மூன்றாவது நாள் நிகழ்வாக இளையராஜா இசை நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் தயாரிப்பாளர்  சங்கம் சார்பில் விஷால் உள்ளிட்டோர் நேற்று ரஜினிகாந்தை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர். மேலும் கமல்ஹாசனை இன்று சந்தித்து அழைப்பு விடுத்தனர்.

இந்நிலையில் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட விஷால், இளையராஜா 75 வது பிறந்தநாள் விழாவில் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் கலந்துகொள்ள ஒப்புக்கொண்டுள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவித்துக்கொள்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.

RajiniKantha and Kamalhaasan will participate in Ilaiyaraaja 75

People looking for online information on Ilaiyaraaja, Kamal Haasan, Rajinikanth, Vishal will find this news story useful.