புலிய நேர்லயே அனுப்பிட்டீங்களேடா - புலிக்கு பயந்து இசையமைக்கும் அனிருத்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

'கனா' படத்தின் வெற்றிக்கு பிறகு தர்ஷன் நடிக்கும் படம் 'தும்பா'. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் நடிக்கிறார்.

இந்த திரைப்படம் காமெடி அட்வெஞ்சர் என்ற ஜானரில் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தை இயக்குநர் துரை செந்தில்குமாரின் உதவியாளர் ஹரீஷ் ராம் இயக்குகிறார். இந்த படத்தில் மற்றொரு முக்கிய வேடத்தில் விஜய் டிவி புகழ் தினாவும் நடிக்கவிருக்கிறாராம்.

இந்த படத்துக்கு விஎஃப்எக்ஸ் மற்றும் சிஜி ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து உருவாகிவருகிறது.  இந்த படத்துக்கு அனிருத், விவேக் - மெர்வின், சந்தோஷ் தயாநிதி ஆகியோர் இசையமைக்கவுள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதனை நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவில் இசையமைப்பாளர் அனிருத்திடம் இயக்குநர் ஹரீஷ் ராம் பாடல் உருவாகிவிட்டதா என கேட்கிறார். அதற்கு இல்லை என பதிலளிக்கும் அனிருத், பாடல் இடம் பெறும் சூழல் குறித்து கேட்கிறார்.

அதற்கு இயக்குநர், படத்தில் புலி வருவது போன்ற காட்சி என்று சூழல் சொல்கிறார்.  பின்னர் அனிருத், நீங்கள் முதலில் அந்த காட்சியை படமாக்குங்கள் . புலி வருவதை பார்த்து தான் அந்த சூழலுக்கு இசையமைக்க முடியும் என்கிறார்.  அப்போது அவர் அருகில் உண்மையாகவே புலி வருகிறது.

புலிய நேர்லயே அனுப்பிட்டீங்களேடா - புலிக்கு பயந்து இசையமைக்கும் அனிருத் VIDEO

Promo Video from Anirudh's Thumba starring Kanaa Dharshan and Keerthi Panidiyan

People looking for online information on Anirudh Ravichander, Dharshan, Keerthi Pandian, Thumba will find this news story useful.