நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமத்தை பிரபல தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது.
லைகா நிறுவனம் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ திரைப்படத்தில் மேகா ஆகாஷ், ரம்யா கிருஷ்ணன், கேத்ரின் தெரசா, யோகிபாபு, ரோபோ ஷங்கர், நாசர், பிரபு உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர்.
தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான ‘அத்தரிண்டிகி தாரேதி’ திரைப்படத்தின் ரீமேக்கான சிம்புவின் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமத்தை பிரபல தனியார் தொலைக்காட்சியான ஜீ தமிழ் கைப்பற்றியுள்ளது.
‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமம் ரூ.8 கோடிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியிடம் விற்கப்பட்டதாக தெரிகிறது.