புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவைச் சேர்ந்த 2000 போர் விமானங்கள் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இன்று அதிகாலை 3.30 மணியளவில் தாக்குதல் நடத்தின. அதில் 12 விமானங்கள், சுமார் 1000 கிலோ வெடிகுண்டைத் தீவிரவாத முகாம்கள் மீது வீசி, அவற்றை முற்றிலுமாக அழித்தன.
இதில் பலாகோட், சாக்கோட், முஸாஃபராபாத் ஆகிய இடங்களில் தாக்குதல் நடந்துள்ளன. அங்கு இயங்கிவந்த முக்கிய தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன. இந்த தாக்குதலில் சுமார் 300 தீவிரவாதிகள் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
இதன் எதிரொலியாக பாகிஸ்தானில் இந்திய திரைப்படங்கள் திரையிடப்படாது என பாகிஸ்தான் அமைச்சர் சவுத்ரி ஃபவத் உசேன் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியா சம்பத்தப்பட்ட விளம்பரங்களும் வெளியிட தடை விதிப்பதாக அவர் கூறியுள்ளார்.