கடைக்குட்டி சிங்கம் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தேவ்.

அட்வெஞ்சர் வகைப்படமான இதில் கார்த்திக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடித்துள்ளார். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைப்பில் இந்த படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியாகியிருந்தது.
இந்த படத்தை புதுமுக இயக்குநர் ரஜத் ரவிசங்கர் இயக்கியுள்ளார். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தின் தமிழகத்துக்கான திரையரங்க வெளியீட்டு உரிமையை முரளி சினி ஆர்ட்ஸ் வாங்கியுள்ளது.
இந்த படம் காதலர் தினத்தை முன்னிட்டு வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.