‘அர்ஜுன் ரெட்டி’ நாயகன் விஜய் தேவரகொண்டாவின் சொந்த வாழ்க்கையில் நிகழ்ந்த உதவேகம் அளிக்கக் கூடிய சம்பவத்தில் இருந்து கதை கிடைத்துவிட்டதாக இயக்குநர் மோகன்ராஜா தெரிவித்துள்ளார்.
தெலுங்கில் ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இவர் சமீபத்தில் சர்வதேச வர்த்தக பத்திரிகையான ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் 30 வயதிற்குள் சாதித்த 30 பேர் அடங்கிய பட்டியலில் இடம் பிடித்திருந்தார்.
இந்த சாதனையை மகிழ்ச்சியுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்த விஜய் தேவரகொண்டா, ‘25 வயசில் ஆந்திரா வங்கில குறைந்தபட்ச பேலன்ஸ் ரூ.500 இல்லனா அக்கவுண்ட் கிளோஸ் ஆகிடும். அதனால 30 வயசுக்குள்ள செட்டிலாகிடுனு அப்பா சொல்லுவார். இப்போ 4 வருஷம் கழிச்சு ஃபோர்ப்ஸ் பத்திரிகையில் நான் 30 அண்டர் 30ல இருக்கேன்' என்று கூறியிருந்தார்.
இதனை பார்த்த ‘தனி ஒருவன்’ இயக்குநர் மோகன்ராஜா, உங்க கிட்ட இருந்து ஒரு சூப்பரான திரைக்கதை கிடைச்சிருக்கு, பின்னாடி காப்பி ரைட்ஸ் கேட்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன். வாழ்த்துக்கள் ப்ரோ என ட்வீட்டியிருந்தார்.
மோகன்ராஜாவின் இந்த வாழ்த்தில் நெகிழ்ந்த விஜய் தேவரகொண்டா, நான் தான் முதல் சாய்ஸா இருக்கனும். அப்படின்னா காப்பி ரைட்ஸ் கேட்க மாட்டேன். நன்றி அண்ணா என ட்வீட்டியுள்ளார்.
You should Give me first right of choice :) I won't sue - big thanksna 🤗
— Vijay Deverakonda (@TheDeverakonda) February 6, 2019