-10 டிகிரியில் ‘ராக்கெட்ரி’ ஷூட்டிங்கை முடித்த மாதவன்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிக்கும் மாதவன், ரஷ்யாவில் நடைபெற்று வந்த இப்படத்தின் ஷூட்டிங்கை நிறைவு செய்துள்ளார்.

தமிழ்,தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என 4 மொழிகளில் உருவாகும் இப்படத்தை இயக்கி வந்த ஆனந்த் மகாதேவன், தவிர்க்க முடியாத சில காரணங்களால் இப்படத்தில் இருந்து விலகினார். அதைத் தொடர்ந்து இப்படத்தின் இயக்குநர் பொறுப்பை முழுவதுமாக நடிகர் மாதவன் ஏற்றுக் கொண்டு திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

1990-களில் ராக்கெட் தொழில்நுட்பம் குறித்த தகவல்களை வெளிநாடுகளுக்கு கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்ட நம்பி நாராயணன், தனது வேலையை இழந்து சிறைச் சென்றார். சமீபத்தில் இது தொடர்பான வழக்கில் இருந்து நிரபராதி என விடுவிக்கப்பட்டார். நம்பி நாராயணின் சாதனையும், அவர் சந்தித்த சவால்களையும் மையமாகக் கொண்டு இப்படம் உருவாகி வருகிறது.

இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள மாதவனின் முதல் படமான ‘ராக்கெட்ரி’ திரைப்படத்தின் ஷூட்டிங் ரஷ்யாவில் நடைபெற்று வந்தது. -10 டிகிரி குளிரில் இப்படத்தின் ஷூட்டிங்கை திட்டமிட்டதற்கு 5 நாட்களுக்கு முன்பாகவே படக்குழு முடித்திருப்பதாக நடிகர் மாதவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Madhavan wraps Russia schedule of 'Rocketry: The Nambi Effect' at -10 degree weather

People looking for online information on Madhavan, Nambi Narayanan, Nambi Narayanan Biopic, Rocketry Shoot, Rocketry the Nambi Effect, Russia will find this news story useful.