BREAKING: சூர்யா, கார்த்தி மாதிரியே பயிற்சி எடுத்த ஜோதிகா

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

ராதா மோகன் இயக்கத்தில் 'காற்றின் மொழி' திரைப்படம் கடந்த வருடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து நடிகை ஜோதிகா டிரீம் வாரியர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியானது.

இந்த படத்தை புதுமுக இயக்குநர் ராஜ் இயக்கிவருகிறார்.  மேலும் இதில், பூர்ணிமா பாக்கியராஜ், சத்யன், ஹரீஸ் பேரடி, கவிதா பாரதி, உள்ளிட்டோர் நடித்துவருகின்றனர்.

ஷான் ரோல்டன் இந்த படத்துக்கு இசையமைக்க கோகுல் பினோய் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துவருகிறார். இந்நிலையில் இந்த படத்தில் ஜோதிகா சிலம்பம் சண்டை செய்யும் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாம்.

அதற்காக  ஜோதிகா, பிரபலசண்டை பயிற்சியாளர் பாண்டியன் மாஸ்டரிடம் சிலம்பம் கற்றுவருகிறாராம். இவர் பல முன்னணி நடிகர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும், சூர்யா மற்றும் கார்த்தி உள்ளிட்டோர் ஆரம்பகாலங்களில் பாண்டியன் மாஸ்டரிடம் பயிற்சி பெற்றுள்ளனர்.

Jyothika learning Silambam for her next

People looking for online information on Dream Warriors, Jyothika, Silambam, SR Prabhu will find this news story useful.