வெரி வெரி பேட் .... சந்தோஷ் நாராயணின் இசையில் ஜிப்ஸி படத்திலிருந்து புரோமோ பாடல்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

குக்கூ, ஜோக்கர் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ராஜூ முருகன் இயக்கியிருக்கம் படம் ஜிப்ஸி. இந்த படத்தில் நடிகர் ஜீவா ஹீரோவாக நடித்துள்ளார். 

பயணங்களை பற்றி பேசும் இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசைமைத்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு இந்த படத்திலிருந்து புரோமோஷனல் பாடலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு,  சமூக செயற்பாட்டாளர்களைக் கொண்டு படமாக்கப்பட்டது.

அதற்கான புகைப்படங்களை படக்குழுவினர் வெளியிட சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் இப்படத்தின் பாடலின் புரோமோ வீடியோ வெளியாகி வைரலானது.

இந்த பாடலில் சந்தோஷ் நாராயணனை போலீஸார் கைது செய்து சிறையில் அடைக்க அழைத்து வருகின்றனர். மற்ற சிறைகளில் திருமுருகன் காந்தி, பியூஸ் மனுஷ் போன்றோர் இருக்கின்றனர்.

அவர்கள் சந்தோஷ் நாராயணனை பார்த்து எதற்கு உங்களை செய்தார்கள். அணு உலை, சேலம் எட்டுவழிச்சாலை உள்ளிட்ட திட்டங்களுக்கு எதிராக போராடுனீங்களா என கேட்கிறார்கள். அதற்கு பதிலளிக்கும் அவர் ஒரு பாட்டு பாடினேன் என்று வெரி வெரி பேட்... பேட் டூ த கோர் என பாடத் தொடங்குகிறார்.

வெரி வெரி பேட் .... சந்தோஷ் நாராயணின் இசையில் ஜிப்ஸி படத்திலிருந்து புரோமோ பாடல் VIDEO

Jiivas gypsy very very bad song promo music by santhosh narayanan

People looking for online information on Gypsy, Jiiva, Raju murugan, Santhosh Narayanan will find this news story useful.