தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நடத்தப்படும் ‘இளையராஜா 75’ நிகழ்ச்சிக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் வரும் பிப்.2 & 3 தேதிகளில் நடைபெறவுள்ள 'இளையராஜா 75' விழாவிற்கு தடை விதிக்கவும், பொதுக்கூட்டம் நடத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தயாரிப்பாளர் சதீஷ்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறும், இளையராஜா நிகழ்ச்சிக்கான வரவு, செலவு கணக்கை சமர்ப்பிக்குமாறும் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில், இவ்வழக்கு மீண்டும் நீதிபதி கல்யாணசுந்தரம் முன்னிலையில் இன்று (ஜன.30) விசாரணைக்கு வந்தது. அப்போது தயாரிப்பாளர்கள் சங்கம் தரப்பில் ‘இளையராஜா 75’ நிகழ்ச்சி தொடர்பான ஒப்பந்தங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. மேலும், வரவு-செலவு கணக்குகள் குறித்த விவரம் விரைவில் தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதனை பரிசீலித்த நீதிபதி இவ்வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார். இதனால், தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தும் இந்நிகழ்ச்சிக்கு தற்போதைக்கு எந்த தடையும் இல்லை என தெரிகிறது.
இளையராஜாவை கவுரவிக்கும் விதமாக நடத்தப்படும் இவ்விழாவில் ஏதும் இல்லை என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், உலக நாயகன் கமல்ஹாசனும் பங்கேற்கின்றனர். இவ்விழாவை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைக்கவுள்ளார்.
The Hon’ble High Court has heard the cases in detail and has reserved orders as of now no order passed against the event and as usual truth will prevail . #TamilfilmProducersCouncil #TFPC #Ilaiyaraaja75 #ThiraiKondattam pic.twitter.com/DoDtvhycb1
— TFPC pr news (@TFPCprnews) January 30, 2019