‘மின்சார கனவு’, ‘கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன்’ திரைப்படங்களை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு ராஜீவ் மேனன் இயக்கத்தில் ‘சர்வம் தாளமயம்’ திரைப்படம் உருவாகியுள்ளது.
ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்துள்ளளார். ஜி.வி.பிரகாஷிற்கு ஜோடியாக ‘8 தோட்டாக்கள்’ படத்தில் நடித்த அபர்ணா முரளி நடித்துள்ளார்.
இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் ஹீரோயினை சைட்டடிப்பதற்காக ஜெர்மன் மொழி கற்க வந்த ஜி.வி.பிரகாஷிடம் ஜெர்மனி பற்றி தங்களுக்கு பிடித்ததை பகிர்ந்துக்கொள்ளுங்கள் என ஆசிரியர் கேட்கிறார். தனக்கு ஜெர்மன் ஷெஃபர்ட் நாய் பிடிக்கும், ஜெர்மன் பீர் பிடிக்கும் என வேடிக்கையாக ஜி.வி.பிரகாஷ் பதிலளிக்கிறார்.
ஏற்கனவே இப்படத்தின் பாடல்கள் அனைத்தும்சூப்பர் ஹிட்டான நிலையில், இப்படத்தின் டிரைலரை நடிகர் தனுஷ் இன்று மாலை 6 மணிக்கு ட்விட்டரில் வெளியிடுகிறார். 'MINDSCREEN சினிமாஸ்' நிறுவனம் சார்பில் லதா தயாரித்துள்ள இப்படத்தில் நெடுமுடி வேணு, குமரவேல், அதிரா, சாந்தா தனஞ்செயன், சுமேஷ், வினித் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் வரும் பிப்ரவரி.1ம் தேதி ரிலீசாகவுள்ளது.