மணிரத்னம் படத்தில் நடிக்கும் ஜி.வி.பிரகாஷ் ?

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

இயக்குநர் மணிரத்னம் தனது படங்களில் புதுமையான கதை மற்றும் திரைக்கதையினால் இந்திய அளவில் பிரபலமானவர். இவரது படங்களின் தொழில்நுட்பங்களை கையாளும் விதம் உலகத்தரத்தில் இருக்கும்.

 

மணிரத்னம் நீண்ட நாட்களாக தான் இயக்கும் படங்களை தனது பட நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ் மூலம் தயாரித்துவருகிறார். அதனால் அவர் படங்களின் மேல் அவருக்கு முழு சுதந்திரம் கிடைக்கிறது. 

 

மேலும்  இவர் தனது மெட்ராஸ் டாக்கீஸ் மூலம் தனது உதவியாளர்கள் படங்களையும் தயாரித்துவருகிறார்.  குறிப்பாக சத்ரியன், ஆசை, நேருக்கு நேர், பைவ் ஸ்டார், டும்டும்டும் போன்ற படங்களை தயாரித்துள்ளார்.

 

இந்நிலையில் தனது உதவியாளர் தன சேகரன் இயக்கும் படத்தை அவர் தயாரிக்கிறார். இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

மேலும் இந்த படத்துக்கு 96 படம் மூலம் கவனம் ஈர்த்த கோவிந்த் வசந்தா இசையமைக்கவிருக்கிறார்.

GV Prakash to act in maniratnam's madras talkies next film

People looking for online information on Govind Menon, GV Prakash Kumar, Madras Talkies, Mani Ratnam will find this news story useful.