பிரபல நடிகரின் படத்திற்கு அதிகாலை சிறப்பு காட்சி, ரசிகர்கள் உற்சாகம்!

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

முதன்முறையாக நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘சர்வம் தாளமயம்’ திரைப்படத்திற்கு அதிகாலை சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் இந்த வாரம் மம்மூட்டி நடித்துள்ள ‘பேரன்பு’, சிம்பு நடித்துள்ள ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’, ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘சர்வம் தாளமயம்’ உள்ளிட்ட திரைப்படங்கள் ரிலீசாகின்றன.

இதில் ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘சர்வம் தாளமயம்’ திரைப்படத்திற்கு அதிகாலை சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இசையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்துள்ள நிலையில், இப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் மம்மூட்டி நடித்துள்ள ‘பேரன்பு’ திரைப்படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. ஏற்கனவே இப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பார்வையாளர்களின் மனதை கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.

இத்துடன் சிம்பு நடித்துள்ள ஃபேமிலி எண்டர்டெய்னர் படமான ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ திரைப்படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.

Early morning special show for G.V.Prakash's Sarvam Thaalamayam

People looking for online information on G. V. Prakash Kumar, Mammootty, Peranbu, Sarvam Thaala Mayam, Simbu, Special Show, Str, Vantha Rajavathaan Varuven will find this news story useful.