ராமின் பேரன்பு வெளியாகும் தேதி அறிவிப்பு

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

தரமணிக்கு பிறகு இயக்குநர் ராம் இயக்கியிருக்கும் படம் பேரன்பு.  மனநலம் குன்றிய பதின்ம வயது பெண்ணுக்கும் அவரது தந்தைக்குமான பாசப்போராடத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது இந்த படம்.

மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி, தங்க மீன்கள் சாதனா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் படம் பல்வேறு திரைப்படவிழாக்களில் விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்துக்கு வைரமுத்து, சுமதி ராம், கருணாகரன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். இசை ரசிகர்களால் மிக விரும்பப்படக் கூடிய கூட்டணியான ராம்-யுவன்-நா.முத்துக்குமார் ஆகியோரில் நா.முத்துக்குமார் மட்டும் இல்லாமல் வெளியாகும் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் வருகிற டிசம்பர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Director Ram's Peranbu release date announced

People looking for online information on Mammootty, Peranbu, Ram, Vairamuthu, Yuvan Shankar Raja will find this news story useful.