இயக்குநர் ராம் இயக்கத்தில் மெகாஸ்டார் மம்மூட்டி நடித்துள்ள ‘பேரன்பு’ திரைப்படம் வரும் பிப்.1ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

இப்படத்தின் பத்திரிகையாளர்களுக்கான சிறப்புக் காட்சி சென்னையில் திரையிடப்பட்டது. அதில் பேசிய இயக்குநர் ராம், எளிமையாக எடுக்கப்பட்ட ‘பேரன்பு’ திரைப்படம் சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது. பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட இப்படம் தற்போது சென்னையில் திரையிடப்பட்டுள்ளதில் மகிழ்ச்சி. இப்படத்தை மக்கள் எப்படி வரவேற்பார்கள் என்ற எதிர்ப்பார்ப்பில் இருக்கிறேன் என்றார்.
மெகாஸ்டார் மம்மூட்டி சார் பெரிய ஸ்டாராக இருந்தாலும், பேரன்புடன் ஆகச்சிறந்த நடிப்பை அளித்துள்ளார். தமிழ் சினிமாவின் குணாதிசயங்களுடன் உருவான இப்படம் விறுவிறுப்புடன் எடுக்கப்பட்ட சாதாரண படம் தான்.
நாம் வாழக் கூடிய இந்த வாழ்க்கை ரொம்ப அழகானது, ஆனந்த மயமானது, ஆசிர்வதிக்கப்பட்டது என்பதை இப்படம் உணர்த்தும். சொர்ப்ப நேரத்திற்காவது நாம் பேரன்புடையவர்கள் என்ற உண்மையை நாம் உணர்வோம் என்று நம்புகிறேன் என கூறியுள்ளார்.