சென்னை: தனுஷ் - இந்துஜா நடிக்கும் புதிய படத்தின் முக்கிய உரிமையை முன்னணி நிறுவனம் கைப்பற்றி உள்ளது.
VALIMAI: அஜித் குமார் - H. வினோத் திடீர் சந்திப்பு.. புதிய கெட்டப்பில் வைரலாகும் LATEST புகைப்படம்!
காதல் கொண்டேன், மயக்கம் என்ன, புதுப்பேட்டை படங்களை தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் நானே வருவேன். இந்த படத்தை அசுரன், கர்ணன் படங்களை தயாரித்த தாணு தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. யுவன் சங்கர் ராஜா இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 16.10.2021 அன்று பூஜையுடன் துவங்கியது. இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக மகாமுனி படத்தில் நடித்த நடிகை இந்துஜா ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக அரவிந்த் கிருஷ்ணா பணியாற்றுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது அரவிந்த் கிருஷ்ணாவுக்கு பதிலாக சில்லுக்கருப்பட்டி, சாணிகாயிதம் பட ஒளிப்பதிவாளர் யாமினி யாக்னமூர்த்தி ஒளிப்பதிவு செய்வதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் யாமினியும் சிலகாரணங்களால் விலகி உள்ளார். இவர்களுக்கு பதிலாக ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளார். புவன சுந்தர் எடிட்டராகவும், விஜய் முருகன் கலை இயக்குனராகவும் பணிபுரிகிறார்.
இன்று இந்த படத்தின் மற்றுமொரு போஸ்டர் வெளியாகி உள்ளது. அதில் இந்த படத்தின் ஆடியோ உரிமையை சரிகம நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக போஸ்டரில் ஓரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சரிகம இந்தியா லிமிடெட், முன்பு தி கிராமபோன் கம்பெனி ஆஃப் இந்தியா லிமிடெட் என்று அழைக்கப்பட்டது. இது RP- சஞ்சீவ் கோயங்கா குழும நிறுவனங்களுக்குச் சொந்தமான இந்தியாவின் மிகப் பழமையான இசை லேபிள் நிறுவனம் ஆகும். இதன் தலைமை அலுவலகம் கொல்கத்தாவில் அமைந்துள்ளது மற்றும் பிற அலுவலகங்கள் மும்பை, சென்னை மற்றும் டெல்லியில் உள்ளது. இசையைத் தவிர, சரிகம யூட்லீ பிலிம்ஸ் என்ற பிராண்ட் பெயரில் திரைப்படங்களையும் பல மொழி தொலைக்காட்சி தொடர்களையும் தயாரிக்கிறது.
நானே வருவேன் படத்தின் ஊடவே தனுஷ், தெலுங்கில் நாகவம்சியின் சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் வாத்தி படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் இந்த படம் தெலுங்கு மற்றும் தமிழில் உருவாக உள்ளது. இந்த படத்திற்கு தமிழில் வாத்தி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு தெலுங்கில் சார் (Sir) என்றும் வைக்கப்பட்டுள்ளது.