தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

பொல்லாதவன் ஆடுகளம் படங்களைத் தொடர்ந்து தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் உருவான வட சென்னை திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

வட சென்னை திரைப்படம் மொத்தம் 3 பாகங்களாக வெளியாகும் என வெற்றி மாறன் தெரிவித்திருந்தார். மேலும் இரண்டாவது பாகத்துக்கு முன் தனுஷுடன் இணைந்து வேறு ஒரு படம் செய்யவிருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

அதன் படி தனுஷ் நடிப்பில் அசுரன் என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு குறித்து தனுஷ் முக்கிய அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதில் இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜனவரி 26 ஆம் தேதி தொடங்கவிருப்பதாக அறிவித்துள்ளார்.

வி கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளார்.  நீண்ட நாட்களுக்கு பிறகு தனுஷ்  - ஜி.வி பிரகாஷ் கூட்டணி இணையவிருப்பதால் இந்த படத்தின் பாடல்கள் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

Dhanush and vetrimaaran's Asuran shoot starts from Jan 26th

People looking for online information on Asuran, Dhanush, GV Prakash Kumar, Vetrimaaran will find this news story useful.