சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் தமிழ்வேந்தன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், திரையரங்குகளுக்கு செல்லும் பார்வையாளர்கள் உணவு, குடிநீர் உட்பட எந்த பொருள்களையும் எடுத்து செல்ல அனுமதி மறுப்பது, மனித உரிமை மீறிய செயல். மேலும், திரையரங்குகளில் உள்ள உணவகங்களில் கூடுதல் விலைக்கு உணவு விற்கப்படுவதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், திரையரங்குகள் என்பது தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமானவை என்பதால் இவ்வழக்கில் உத்தரவு பிறப்பிக்க முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
சில வருடங்களுக்கு முன் தமிழக அரசு பார்கிங் கட்டணங்களை நிர்ணயித்தது. அதன்படி, கார் பார்க்கிங்கிற்கு ரூ.20யும், இருசக்கர வாகனங்களுக்கு ரூ. 10யும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.