அஜித், நயன்தாரா, உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 10 ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு வெளியான படம் விஸ்வாசம்.
தந்தைக்கும் மகளுக்கும் இடையேயான பாசப்பிணைப்பு பற்றி பேசும் இப்படம் ரசிகர்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது. இதனால் குடும்பம் சகிதம் ரசிகர்கள் தியேட்டரை நோக்கி படையெடுக்கத் தொடங்கினர்.
இந்நிலையில் சென்னை காவல்துறை துணை ஆணையர் அர்ஜூன் சரவணன் விஸ்வாசம் படம் குறி்தது கருத்து தெரிவித்துள்ளார். அதில்,
படத்தில் கதாநாயகன், கதாநாயகி இருவரும் இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது கட்டாயமாக ஹெல்மெட் அணிந்து செல்வது.
அஜித் கார் ஓட்டும் போதெல்லாம் சீட் பெல்ட் அணிந்து செல்வது, பெற்றோர்கள் தங்கள் கனவுகளை குழந்தைகள் மேல் திணிக்காமல், அவர்களை கனவுகளை எட்ட துணை நிற்க வேண்டுவது, போன்ற காட்சிகள் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
இந்தியாவில் அதிக சாலை விபத்துக்கள் நடைபெறும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள அஜித் போன்ற நடிகர்கள் போக்குவரத்து விதிகளை பின்பற்றி நடிக்கும் போது அவரது ரசிகர்களும் பின்பற்ற வேண்டும் என்பதே என் அவா என்று தெரிவித்துள்ளார். இதனை சத்யஜோதி நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.