'தளபதி 63'-க்காக ரஹ்மான் இசையில் மீண்டும் ஒரு 'சிம்டாங்காரன்' ?

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலக்ஷ்மி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து கடந்த வருடம் தீபாவளியை முன்னிட்டு வெளியான படம் 'சர்கார்'. அரசியலை மையமாகக் கொண்டு உருவான இந்த படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

மேலும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை  இந்த படத்துக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. குறிப்பாக  இந்த படத்தில் இடம் பெற்ற சிம்டாங்காரன் பாடல் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. விவேக் எழுதிய இந்த பாடலை பம்பா பாக்யா, விபின் அனேஜா, அபர்ணா நாராயணன் உள்ளிட்டோர் பாடியிருந்தனர்.

இந்நிலையில் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துவரும் தளபதி 63 படத்தில் பம்பா பாக்யா ஒரு பாடல் பாடியுள்ளதாக செய்திகள் வெளியானது.

இதுகுறித்து Behindwoods சார்பாக பம்பா பாக்யாவை தொடர்பு கொண்ட போது, தளபதி 63 படத்தில் ஒரு பாடலுக்கு பல்லவி மட்டும் பாடியிருந்தேன். ஆனால் இந்த பாடல் படத்தில் வருமா என உறுதியாக சொல்ல முடியாது. இந்த பாடலும் சிம்டாங்காரன் பாடல் போல ஒரு குத்துப்பாடல் தான் என்றார்.

Bamba Bakya shares his experience in A.R.Rahman and Vijay's thalapathy 63 after Simtangaran

People looking for online information on AR Murugadoss, AR Rahman, Atlee, Sarkar, Thalapathy 63, Vijay will find this news story useful.