தனுஷ்-வெற்றிமாறனின் ‘அசுரன்’பட சூப்பர் அப்டேட்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

‘வடசென்னை’ படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் ‘அசுரன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியாகிறது.

கலைப்புலி எஸ்.தாணுவின் ‘வி கிரியேஷன்ஸ்’ தயாரிப்பில் உருவாகவிருக்கும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் நாலை துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக இன்று மாலை 6 மணிக்கு ‘அசுரன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

எழுத்தாளர் பூமணியின் ‘வெக்கை’ நாவலை தழுவி உருவாகவிருக்கும் இப்படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் பணியை குறுகிய காலத்திற்குள் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

‘பொல்லாதவன்’, ‘மயக்கம் என்ன’, ‘ஆடுகளம்’ திரைப்படங்களை தொடர்ந்து தனுஷ் நடிக்கும் ‘அசுரன்’ திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். வெற்றிக் கூட்டணியான தனுஷ்-வெற்றிமாறன்-ஜி.வி.பிரகாஷின் அசுர கூட்டணி மீது அதிக எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.

Asuran First Look Poster releasing today at 6pm

People looking for online information on Asuran, Asuran First Look, Dhanush, G. V. Prakash Kumar, Kalaipuli S Thanu, Manju Warrier, Vetrimaaran will find this news story useful.